தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களை சந்தித்த ஜனாதிபதி – தொழிலாளர்கள் பெரும் வரவேற்பு

தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்களை சந்தித்த ஜனாதிபதி – தொழிலாளர்கள் பெரும் வரவேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (11) காலை நானுஓயா ரதல்ல குறுக்குவழி பாதையில் அப்பகுதியில் உள்ள தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி குறித்த இடத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, தோட்டத் தொழிலாளர்கள் அவருக்கு பெருவரவேற்பு அளித்தனர்.

இதன்போது தமது சம்பளத்தை அதிகரித்தமைக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தங்கள் சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், தங்கள் பிரச்சினைகளை ஆராயவும் வந்த ஒரே ஜனாதிபதி என ஊடகங்களிடம் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )