மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி

மல்வத்து, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி

அஸ்கிரிய மற்றும் மல்வத்து தரப்பு மகாநாயக்க தேரர்களை இன்று (03) பிற்பகல் சந்தித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் ஆசியும் பெற்றுக் கொண்டார்.

முதலில், மல்வத்து மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா நாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசி பெற்றதோடு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

பின்னர், அஸ்கிரிய மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி , அஸ்கிரிய மகா நாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின்  நலம் குறித்து கேட்டறிந்ததோடு அவருடனும் கலந்துரையாடியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This