திருத்தந்தை 14ம் லியோவுக்கு ஜனாதிபதி வாழ்த்து

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை (போப்) பதினான்காம் (XIV) லியோவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில், திருத்தந்தை பதினான்காம் லியோ உலகளாவிய கத்தோலிக்க சமூகத்தை வழிநடத்தும்போது அவர் வலிமையையும் ஞானத்தையும் பெறவும் ஜனாதிபதி வாழ்த்தியுள்ளார்.
“உங்கள் தலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொண்டு வரட்டும்” என்றும் இலங்கை மக்கள் சார்பாக அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி திசாநாயக்க தமது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.