நேபாளத்தின் இடைகால பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசிலா கார்கியிற்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அமைதி மற்றும் ஜனநாயகத்தை நேபாளத்தில் நிலைநாட்டுவதற்கு அவரது தலைமைத்துவம் வழியேற்படுத்துமென தான் நாம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி நேற்றிரவு பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.