அதானி குழுமம் இலங்கையில் எவ்வாறு செயற்படுகிறது என்பதே முக்கியம் – அநுர

அதானி குழுமம் இலங்கையில் எவ்வாறு செயற்படுகிறது என்பதே முக்கியம் – அநுர

அதானி குழுமத்தின் ஏனைய நாடுகளுடனான செயற்பாடுகள் தொடர்பில் தமது அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை மாறாக இலங்கையில் அந்த குழுமத்தின் செயற்பாடுகளில் மாத்திரமே கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எகனொமிக் டைம்ஸுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தமது நிலையான அரசாங்கம் மேலும் இந்திய முதலீடுகளை எதிர்பார்க்கிறது. அதானி குழுமம் ஏனைய நாடுகளுடன் எவ்வாறு செயற்படுகிறது என்பது தொடர்பில் நாங்கள் கவனத்திற்கொள்ளவில்லை. அந்த குழுமம் எங்களுடன் எவ்வாறு செயற்படுகிறது என்பதே முக்கியம்.

“நாங்கள் முதலீடுகள் மற்றும் வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டுள்ளோம். அவர்கள் எமது நாட்டில் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்கள் எங்களுக்கு ஏற்ற வகையில்,எங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற வகையில் பணியாற்றினால், அதானி குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

இலங்கையில் முக்கியமான முதலீடுகளை செய்துள்ள அதானி குழுமம் மீது அமெரிக்காவில் பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த குழுமம் அதனை முழுமையாக மறுக்கிறது.

“அமெரிக்க நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விளைவுகள் மற்றம் மக்களின் ஒருமித்த கருத்து தொடர்பில்
அவதானம் செலுத்துவோம்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி திட்டத்துக்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திடம் முன்வைத்த நிதியுதவிக்கான கோரிக்கையை அதானி குழுமம் மீளப் பெற்றுள்ளது ஆனாலும்
அந்த திட்டத்துக்கான உள் நிதி திரட்டல்கள் மூலம் நிதியளிப்பதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது” என்றார்.

Share This