ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால், அந்நாட்டு நேரப்படி காலை 11:44 மணியளவில், சுமார் 20 கிலோமீற்றர் (12 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ள ஜப்பானிய வானிலை ஆய்வு மையம், இதன் காரணமாக கடல் அலைகள் 1 மீற்றர் (39 அங்குலம்) வரை உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமையும் அதே பிராந்தியத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்தது.

அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வடக்கு ஹொக்கைடோவிலிருந்து (Hokkaido) டோக்கியோவிற்கு கிழக்கே சிபா (Chiba) வரையிலான பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்பதால், அது குறித்து அவதானமாக இருக்குமாறு அரசாங்கம் அங்குள்ள மக்களுக்கு விசேட அறிவித்தல்களை விடுத்திருந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )