
அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அசாம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று (05) அதிகாலை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது.
அதிகாலை 4:17 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் அசாமில் உள்ள மோரிகான் மாவட்டத்திற்கு அருகில் பதிவாகியுள்ளது.
மத்திய அசாமில் உள்ள மோரிகான் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் பலமாக உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை உயிர் சேதம் அல்லது சொத்து சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று நாட்டின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அசாம் உட்பட வடகிழக்கு இந்தியா, நாட்டின் மிகவும் உணர்திறன் வாய்ந்த நில அதிர்வு மண்டலத்தில் வருகிறது என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
