கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்ற கடும் போட்டி – பிரபா கணேசன் அரசாங்கத்திற்கு ஆதரவு

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் படையை ஆதரிக்க அஞ்சல் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளது.
நேற்று (22) கூடிய கட்சியின் செயற்குழு இந்த முடிவை எடுத்ததாக கட்சித் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்தார்.
மேலும் கருத்துக்களை வெளிப்படுத்திய அவர், எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதியும் தனது கட்சியினரை அழைத்ததாகக் கூறினார்.
இருப்பினும், தனது கட்சி கொழும்பு மாநகர சபை மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், எனவே தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கொழும்பு மாநாகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றிருந்த் போதிலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற்றிருக்கவில்லை.
இதனால் ஆட்சியை கைப்பற்ற ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி எழுந்துள்ள நிலையில், உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஏனைய சிறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள.
இதில் ஏற்கனவே பல தரப்பினர்களும் ஆளும் கட்சிக்கு ஆதரளிக்க முன்வந்துள்ள நிலையில், தற்போது அஞ்சல் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தேசிய கூட்டணியும் ஆளும் கட்சியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது.
இந்தக் கூட்டணியின் தலைவர் பிரபா கணேசன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.