தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமானது

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமானது

தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது.

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று காலை 08 மணிக்கு ஆரம்பமானது.

நாளை மற்றும் எதிர்வரும் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளிலும், தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம், பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6,63,499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 6,48,490 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

மேலும், தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் அரச நிறுவனங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புனித தந்ததாது கண்காட்சி இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்காகக் கண்டியில் விசேட வாக்களிப்பு நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 

Share This