முத்தமிட்ட போட்டோவை போட்டு திருமணத்தை அறிவித்த பிரபல தமிழ் நடிகை

முத்தமிட்ட போட்டோவை போட்டு திருமணத்தை அறிவித்த பிரபல தமிழ் நடிகை

மறைந்த பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி, தான்யா ரவிச்சந்திரன். தமிழில் சில பிரபலமான படங்களில் நடித்திருக்கும் தான்யா, இப்போது திரையுலகில் இருக்கும் ஒருவரையே கரம் பிடிக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா?

தனது தாத்தாவின் நடிப்பை பார்த்ததில் இருந்து, தான்யாவிற்கு தானும் நடிகையாக வேண்டும், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என ஆசை பிறந்ததாம். இதையொட்டி, அவர் சிறு வயதில் இருந்தே நடிப்பிலூம், நடத்திலும் ஆர்வம் காட்டி வந்தார்.

பி.காம் படித்து விட்டு நடிக்க வந்த இவருக்கு மிஷ்ட்கின் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அது தள்ளி போனது.

இதையடுத்து, 2016ல் முதன் முறையாக சசிகுமாரின் பலே வெள்ளையத்தேவா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன் பிறகு பிருந்தாவனம் படத்தில் அருள் நிதிக்கு ஜோடியாக நடித்தார்.

தான்யாவின் திரை வாழ்க்கையை தூக்கி விட்ட படம், கருப்பன். இதில், பசுபதிக்கு தங்கையாக, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த இவர், அந்த படத்தின் கேரக்டர் அன்பு செல்வியாகவே இப்போதும் அறியப்படுகிறார்.

ஆனால், துரதிர்ஷ்ட வசமாக அந்த படத்தை தாண்டி வேறு எந்த படத்திலும் இவர் கதாப்பாத்திரம் அழுத்தமாக பேசப்படவில்லை. நெஞ்சுக்கு நீதி, டைகர், அகிலன் உள்ளிட்ட படங்கள் வெளியானாலும் அதில் இவரது கேரக்டர்களுக்கு குறந்த முக்கியத்துவமே வழங்கப்பட்டது.

நடிகை தான்யா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ஒவ்வொரு frame-ம் இதைதான் காட்டுகிறது- ஒரு முத்தம், ஒரு வாக்குறுதி, எப்போதும் என்றென்றும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முகம் தெரியாமல் இருக்கும் அந்த போட்டோவில், அவர் தனது வருங்கால மாப்பிள்ளைக்கு முத்தம் கொடுப்பது நிழல் படம் போல காண்பிக்கப்பட்டுள்ளது.

29 வயதாகும் தான்யா, இப்படி திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்டிருப்பது பலரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இவருக்கு பிரபல நடிகை சித்தி இட்னானி, காளிதாஸ் ஜெயராம், தேஜூ அஸ்வினி, டாப்சி உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தான்யா, கௌதம் என்கிற ஒளிப்பதிவாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர், ஆனபெல் சேதுபதி, என்ன சொல்லப்போகிறாய் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.

தற்போது லோகேஷ் கனராஜின் தயாரிப்பில் உருவாகி வரும், லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் பென்ஸ் திரைப்படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.

கெளதமும் தான்யாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், இரு வீட்டாரும் கிரீன் சிக்னல் கொடுத்தை அடுத்து, தற்போது இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தான்யாவின் ரசிகர்கள் உள்பட திரையுலகினர் பலர் இந்த ஜோடிக்கு தற்போது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இவர்களின் திருமண தேதி குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது குறித்து இவர்கள் விரைவில் பதிவிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This