நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என்கிறார் போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு இரு நுரையீரல்களிலும் நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது.
இரட்டை நிமோனியா என்பது ஒரு கடுமையான தொற்று ஆகும், இதனால் சுவாசிப்பது மிகவும் கடினம்.
தற்போது ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் அவர், இந்த நோயிலிருந்து மீள்வது கடினம் என தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வத்திக்கானில் இருந்து தகவல் வெளியான போதிலும், போப் பிரான்சிஸ் இவ்வாறானதொரு அச்சத்தை வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.