பாதாளக் குழுவுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் கதறல்

சட்டம் தற்போது உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும், பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய தரப்புகளே அரசியல் பழிவாங்கல் என்று விமர்சித்து வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
குற்றவாளிகள், பாதாள உலகக் குழுவினர், போதைப்பொருள் வியாபாரிகள் ஆகியோரைக் கைது செய்த பின்னர் அவர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையிலேயே கைதுகள் இடம்பெறுகின்றன.
இது அரசியல் பழிவாங்கல் அல்ல. அவ்வாறு கூறி சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை தடுக்க முடியாது. எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை. சட்டத்தின் பிரகாரமே நடவடிக்கை இடம்பெறுகின்றது.
பாதாள உலகக் குழுக்களை அண்டி இருந்த தரப்புகள்தான் தற்போது அஞ்சுகின்றன. பொலிஸாருக்குத் தேவையான வளங்களையே அரசு வழங்கி வருகின்றது. விசாரணைகளில் தலையிடவில்லை என தெரிவித்துள்ளார்.