அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்கு செல்ல தடை இல்லை

அரசியல் நடவடிக்கைகளுக்குப் பாடசாலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்குள் செல்வதை தடை செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் பாடசாலைகளில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்பதைக் காண முடிந்தது.
அதன் அடிப்படையில், அரசியல்வாதிகள் பாடசாலைக்களுக்கு செல்வதில் தடை உள்ளதா அல்லது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே செல்ல முடியுமா என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அரசியல்வாதிகள் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்குள் அரசியல் செய்ய கூடதே தவிர அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்கு செல்ல கூடாது என எங்கும் குறிப்பிடப்படவில்லை எனவும் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.