
பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டம்
காட்டு போலியோ வைரஸ் பதிவானதைத் தொடர்ந்து போலியோ தடுப்பு மருந்து வழங்கும் வேலைத்திட்டத்தை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் எல்லையிலுள்ள ஆப்கான் அகதி முகாம்களைக் கொண்ட 104 கவுன்சில் பிரதேசங்களில் 6 இலட்சத்து 60 ஆயிரம் பிள்ளைகளை இலக்கு வைத்து இத்தடுப்பு மருந்து தற்போது வழங்கப்படுகிறது.
பாகிஸ்தானின் போலியோ ஒழிப்புக்கான பிராந்திய ஆய்வக அதிகாரியொருவரின் தகவல்களின் படி, இவ்வருடத்தின் முதல் சில வாரங்களுக்குள் போலியோ வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
CATEGORIES உலகம்
