டெய்சி ஃபாரெஸ்ட் மீதான பயணத் தடையை பொலிஸார் மீண்டும் உறுதிப்படுத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பணமோசடி விசாரணை தொடர்பாக டெய்சி ஃபாரெஸ்டுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க மீண்டும் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, கடுவெல நீதவான் அத்தகைய பயணத் தடை எதுவும் விதிக்கவில்லை என என்று கூறியதாக சட்டத்தரணி பிரேம்நாத் தொலவத்தே ஊடகங்களுக்குத் தெரிவிதிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றத்தால் உத்தரவிடப்படாத தகவல்களை வெளியிட்டதன் மூலம் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் குற்றத்தைச் செய்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், சனிக்கிழமை (15) ஊடகங்களுக்குப் பேசிய எஸ்.எஸ்.பி மனதுங்க, டெய்சி ஃபாரெஸ்டுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை பெறப்பட்டதை உறுதிப்படுத்தினார்.