ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு கடந்த 20ஆம் திகதி தொடக்கம் மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, சமுதித சமரவிக்ரமவுக்கு அமைச்சர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் நான்கு பேரை வழங்கியுள்ளதுடன் அவர்கள் நால்வரும் சமுதிதவுக்கு மற்றும் அவருடைய வீட்டுக்கு பாதுகாப்பு வழங்க நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுக்கு கடந்த அரசாங்கத்தின் போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதுடன் அவருக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This