பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 07 வருட சிறைத் தண்டனை

பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 07 வருட சிறைத் தண்டனை

நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு கொடூரமாக சித்திரவதை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு 07 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி சிந்தக ஸ்ரீநாத் குணசேகரவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் பரிசோதகர், 2020 ஆம் ஆண்டில் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போதே நபர் ஒருவர் மீது இவ்வாறு
தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

குறித்த பொலிஸ் பரிசோதகர் தற்போது சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்டு கடமையாற்றி வந்துள்ளார்.

அவருக்கு மேலதிகமாக 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் 6 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )