
இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
1,500 ரூபாவை இலஞ்சமாக கோரி, அதைப் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
அடிப்பல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பண்டாரஹேனவில் உள்ள கைசர் பைபிள் தேவாலயத்தில் நேற்று (14) பிற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.
வெளிநாடு செல்வதற்குத் தேவையான பொலிஸ் அறிக்கையை வழங்குவதற்காக முறைப்பாட்டாளரிடம் முதலில் 2,000 ரூபா இலஞ்சம் கேட்கப்பட்டதாகவும், பின்னர் அதிலிருந்து 500 ரூபாவை கழித்து 1,500 ரூபாவை இலஞ்சமாக கோரியதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
CATEGORIES இலங்கை
TAGS இலஞ்சம்
