‘காந்தாரா’ படக்குழுவினர் மீது பொலிஸில் முறைப்பாடு… வனத்தில் தீ வைப்பதாக குற்றச்சாட்டு
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது காந்தாரா: சாப்டர் 1 என தலைப்பிடப்பட்டுள்ள இப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஹெரூர் காட்டுப் பகுதியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்துவதால் அங்கு வெடி பொருட்களைப் பயன்படுத்தி காட்டுப் பகுதிக்கு தீ வைத்து சுற்றுச் சூழலை மாசுபடுத்தியதாகவும் அக் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் படக்குழுவினருக்கும் கிராமவாசிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதனால் படக்குழு மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.