களனி ரயில் நிலையத்தில் அச்சுறுத்தலாக இருந்த யாசகர்களை கைது செய்த பொலிஸார்

களனி ரயில் நிலையத்தில் அச்சுறுத்தலாக இருந்த யாசகர்களை கைது செய்த பொலிஸார்

களனி ரயில் நிலையத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் இரவு பகலாக அசுத்தப்படுத்தி வந்த ஒரு யாசகர்கள் குழுவொன்றை பேலியகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பதினொரு யாசகர்களும் கொழும்பு புதுக்கடை எண் 5 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, இந்த யாசகர்களின் நடத்தை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொது இடத்தில் தொந்தரவாக நடந்து கொள்வது குறித்து அப்பகுதி மக்கள் முறைப்பாடு அளித்து வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

உண்மைகளை பரிசீலித்த நீதவான், அவர்களில் பத்து பேரை களனி சமூக சேவைகள் துறை அதிகாரிகளின் ஒப்புதலுடன் ரிதிகாம யாசகர்கள் முகாமுக்கு அனுப்பியுள்ளார்.

களனி ரயில் நிலையத்தை, யாசகர்களின் அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக பேலியகொட பொலிஸாருக்கும், நீதிமன்றத்திற்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )