பதுளை மாவட்டத்தில் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமிகள்

பதுளை மாவட்டத்தில் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமிகள்

பதுளை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலை நிலவிவருவதால் சில விஷமிகள் காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல் .உதயகுமார தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நிலவும் வறட்சியான காலநிலையை பயன்படுத்தி சில விஷமிகள் கடந்த சில நாட்களாக காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாடுகளால் சுற்றுச் சூழலுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படுவதுடன் நீரேந்து பிரதேசங்களும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளன. வனவிலங்குகளுக்கும் உயிராபத்து ஏற்பட்டு அவற்றின் இருப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் மாவட்டத்தின் இயற்கை சமநிலையில் எதிர்மறை தாக்கம் ஏற்படுவதுடன் பல்வேறு துறைகளில் உள்ள மக்களின் வாழ்வாதரமும் பாதிக்கப்படும்.

இந்நிலையயை கருத்திற் கொண்டு காடுகளுக்கு தீ வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் விஷமிகளை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும். இதுகுறித்து முறைப்பாடுகளை அளிக்க 0773957880 என்ற கைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(பசறை நிருபர்)

Share This