பிரபல பாதாள உலகக் உறுப்பினர் பொடி லெசி இந்தியாவில் கைது

பிரபல பாதாள உலகக் உறுப்பினர் பொடி லெசி இந்தியாவில் கைது

பாதாள உலகக் உறுப்பினராக அறியப்படும் ‘பொடி லெசி’ என்ற ஜனித் மதுஷங்க சில்வா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

தடுப்புக் காவலில் இருந்த ‘பொடி லெசி’ கடந்த டிசம்பர் ஒன்பதாம் திகதி பலபிட்டிய உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

மேலும், சந்தேகநபருக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பொடி லெசி தனது பிணை நிபந்தனைகளை மீறி நாட்டை விட்டு தப்பிச் சென்றார். அவர் இந்தியாவில் இருப்பதாக தகவல் கிடைத்ததும், சந்தேக நபரைக் கைது செய்ய இந்திய அதிகாரிகளிடம் உதவி கோரப்பட்டிருந்தது.

இதன்படி, பொடி லெசி கைது செய்யப்பட்டதாக இந்திய பொலிஸார் இலங்கை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிணை நிபந்தனைகளை மீறியதற்காக சந்தேக நபரை இலங்கைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share This