பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் – தண்ணீர் போத்தல்களுக்கு தடை

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் சந்தை ஆய்வுகளில் ஆபத்தான நிலைமைகள் பதிவாகியுள்ளதால், அடுத்த இரண்டு மாதங்களில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இது தொடர்பில் இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சிறுவர்களின் பாதுகாப்பிற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.