திடீரென தீப்பிடித்த விமானம் – 76 பயணிகளுடன் நேபாளத்தில் தரையிறக்கம்

திடீரென தீப்பிடித்த விமானம் – 76 பயணிகளுடன் நேபாளத்தில் தரையிறக்கம்

நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று திங்கள்கிழமை இடது எஞ்சின் தீப்பிடித்து எரிந்ததால், புத்தா ஏர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பணியாளர்கள் உட்பட 76 பேர் இருந்ததாக திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தெரிவித்துள்ளது.

காத்மாண்டுவிலிருந்து பத்ராபூருக்குச் சென்று கொண்டிருந்த விமான எண் 953, அதன் எஞ்சினில் “தொழில்நுட்பக் கோளாறு” ஏற்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிகின்றன.

“இதன் விளைவாக, விமானம் மீண்டும் காத்மாண்டுவிற்கு திருப்பி விடப்பட்டு, காலை 11:15 மணிக்கு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக,” தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்நிலையில், தொழில்நுட்பக் குழு தற்போது விமானத்தை ஆய்வு செய்து வருகிறது. பயணிகளை வேறொரு விமானத்தில் பத்ராபூருக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று புத்தா ஏர் தெரிவித்துள்ளது.

 

 

 

Share This