இலங்கையில் வைரலாகும் வெள்ளக்கார தம்பதியின் புகைப்படம்

இலங்கையில் வைரலாகும் வெள்ளக்கார தம்பதியின் புகைப்படம்

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த சில மாதங்களாக சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட மாத ஆரம்பத்தில் நாட்டுக்கு வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 மில்லியனாக பதிவாகும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இலங்கையில் சுற்றுலாவில் ஈடுபட்டுள்ள வெள்ளக்கார தம்பதியொன்று தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள புகைப்படமொன்று தற்போது வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தில் அவர்களுக்கு பின்னர் காணப்படும் வீதி சமிக்ஞையில் முன்னாள் யானைகள் வரும் என்று விளக்கமளிக்கும் குறியீடு உள்ளது.

அவர்கள், இதுபோன்ற குறியீட்டை நாம் உலகில் வேறு எங்கும் கண்டதில்லை என பதிவிட்டுள்ளனர். இதற்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This