வடக்கு லண்டனில் தொலைபேசி கொள்ளை சம்பவங்கள்

வடக்கு லண்டனில் கடந்த சில வாரங்களாக பொது போக்குவரத்து பேருந்துகளில் தொடர்ச்சியான தொலைபேசி கொள்ளை சம்பவங்கள் இடம்பெறுவதால் பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு லண்டனில்  TfL பேருந்து வழித்தடங்களை திருடர்கள் குறிவைத்து இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டோக் நியூவிங்டன் மற்றும் ஹாக்னி பகுதிகளில் வசிப்பவர்கள் இந்த கொள்ளை சம்பவங்களால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதுடன், கவலை வெளியிட்டுள்ளனர்.

ஸ்டோக் நியூவிங்டன் வழியாக செல்லும் பல பேருந்து வழித்தடங்களில் சம்பவங்கள் நடந்ததாக இங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் 73, 456, 141, 54, 243, 341 மற்றும் 393 ஆகியவை அடங்கும். இதில் ஏராளமான சம்பவங்கள் 73 வழிதடத்தில் இடம்பெறுள்ளதாக பயணிகள் முறைப்பாடு அளித்துள்ளனர்.

திருடர்கள் பேருந்துகளின் கதவுகளுக்கு அருகில் அமர்ந்திருக்கும் பயணிகளை குறிவைத்து, தொலைபேசிகளைப் பறித்து, கதவுகள் மூடும்போது தப்பிச் செல்கின்றனர்.  73 வழிதடத்தில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தொலைபேசியும் இவ்வாறு இறிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து TfL செய்தித் தொடர்பாளர்  கூறியுள்ளதாவது, “திருடர்கள் பொதுப் போக்குவரத்து ஒருங்கிணையும் பகுதிகள் உட்பட பரபரப்பான இடங்களை குறிவைத்து இவ்வாறு மக்களது பொருட்களை கொள்ளையடித்து செல்கின்றனர்.

இந்தச் செயல்பாட்டைச் கட்டுப்படுத்த நாங்கள் காவல்துறையுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம் எனக் கூறியுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )