உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்திற்கு எதிரான மனு – விசாரணை நிறைவு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டமூலத்திற்கு எதிரான மனு – விசாரணை நிறைவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், தனது இரகசிய தீர்ப்பை ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற சபாநாயகருக்கும் அனுப்புவதாக இன்று (27) அறிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் நீடித்த வழக்கு விசாரணையை நிறைவுறுத்தி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த மனுக்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட நான்கு தரப்பினர் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This