யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் – 55 ஆயிரம் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவு

யாழ்.போதனாவிற்குள் அத்துமீறி நுழைந்த நபர் – 55 ஆயிரம் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதமாக்கிய நபருக்கு வைத்தியசாலைக்கு 55 ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி காயமடைந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாற , வைத்தியசாலைக்குள் உள்ள அவசர சிகிசிச்சை பிரிவு வரையில் அத்துமீறி நுழைந்த நபர், அங்கு கடமையில் இருந்த உத்தியோகஸ்தர்களுடன் தர்க்கம் புரிந்து, மேசையில் இருந்த பிரிண்டர் ஒன்றினை உடைந்து சேதமாக்கியும் இருந்தார்.

இது தொடர்பிலான கண்காணிப்பு கேமராக்களின் காணொளிகளும் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி இருந்து.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினரால், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தாக்குதலாளியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மன்று, தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த வழக்கில் அவரை குற்றவாளியாக கண்ட மன்று, வைத்தியசாலை உபகரணங்களுக்கு சேதமேற்படுத்தியமைக்காக வைத்தியசாலைக்கு 55 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மன்று உத்தரவிட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )