அயகம பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

அயகம பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

அயகம, சமருகம பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்த நபர், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் சமருகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.

அயலவர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )