அரச சேவைக்கு சுமார் 70,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி

அரச சேவை, மாகாண அரச சேவை மற்றும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளுக்கு சுமார் 70,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதா மீதான குழு அமர்வுகளின் விவாதத்தின் போது அவர் இதனைத் தவைித்தார்.
இந்த ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச ஊழியர்களில் பட்டதாரிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், 12,309 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அரச சேவைக்குத் தேவையான ஆட்சேர்ப்பு மற்றும் அதன் தொடர்ச்சிக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான இடைக்கால நடவடிக்கையாக பிரதமரின் செயலாளர் தலைமையில் அரச சேவை ஆட்சேர்ப்பு மறுஆய்வுக் குழு நிறுவப்பட்டுள்ளது என்றும், அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளை அமைச்சரவை பரிசீலித்து தேவையான ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி வழங்கும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
