துஷார உபுல்தெனியவுக்கு, அவரது சம்பளத்தில் பாதி தொகையை வழங்க அனுமதி

துஷார உபுல்தெனியவுக்கு, அவரது சம்பளத்தில் பாதி தொகையை வழங்க அனுமதி

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த காலப்பகுதியில் அவரது சம்பளத்தில் பாதி தொகையை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று புதன்கிழமை (11) இதனை உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாக பயன்படுத்தி சிறைக் கைதி ஒருவரை விடுதலை செய்தமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்டு வரும் விசாரணைகளின் பின்னணியில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டார்.

அவரை நேற்று செவ்வாய்க்கிழமை, புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This