18 வயது நிரம்பியவர்கள் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும்

18 வயது நிரம்பியவர்கள் உள்ளூராட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும்

இவ்வாண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று 18 வயது நிரம்பியவர்கள், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதைத் தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இதற்கு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள் தகுதியுடையவர்களாக கருதப்படுகின்றனர்.

வேட்பாளர் நியமன வழிகாட்டுதல்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி 25 வீதத்துக்கும் அதிகமான இளைஞர் பிரதிநிதித்துவம் மற்றும் பாலின ஒதுக்கீடுகள் பிரதேச மட்டத்திலும் குறைந்தது 25 வீத பெண் வேட்பாளர்களுக்கும் விகிதாசாரப் பட்டியல்களில் 50 வீத பெண்களுக்கும் இருக்க வேண்டும்.

Share This