கடவுச்சீட்டு நெருக்கடி – புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, புலம்பெயர் தொழிலாளர்களின் இடம்பெயர்வை முடக்கும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுகளுக்கு மேல் புதிய கடவுச்சீட்டுகளுக்கான கோரிக்கை வழங்கப்படாத நிலையில், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, கொரிய மொழி புலமைத் தேர்வில் பங்கேற்பவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற கடவுச்சீட்டு எண்களை வழங்க வேண்டும் என்பதால் வரும் வாரங்களில் விண்ணப்பங்கள் பெருகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புலம்பெயர்ந்தோரின் தேவையை பூர்த்தி செய்ய சுமார் 30,000 பயண ஆவணங்கள் வழக்கமாக தேவைப்படுகின்றன.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடவுச்சீட்டு தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதில் தலையிடுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், இலங்கைக்கான புலம்பெயர் தொழில் சந்தை பிற நாடுகளுக்கு திரும்பும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒரு கூட்டம் நடைபெற்றது. இருப்பினும், உறுதியான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.