பார்வையாளர்கள் விமான நிலையத்துக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – பயணிகளுக்கு மட்டுமே அனுமதி 

பார்வையாளர்கள் விமான நிலையத்துக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – பயணிகளுக்கு மட்டுமே அனுமதி 

சீரற்ற வானிலை காரணமாக, விமான நிலையம் செல்லும் வீதிகள் பல பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக சில வீதிகளில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பயணிகள் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தி விமான நிலையத்தை பாதுகாப்பாக அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், விமான நிலைய வளாகத்தில் நெரிசலை குறைக்க பயணிகள், பார்வையாளர்களை முனையத்திற்கு அழைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் பயணிக்கும்போது பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் செயற்படுமாறு விமான நிலைய நிர்வாகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )