காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்

காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்

பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்றுமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து நேற்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்டது. அது பிற்பகல் 2.00 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து 92 பயணிகளுடன் மாலை 3.00 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கிய பயணத்தை குறித்த படகு ஆரம்பித்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த சிவகங்கை பயணிகள் படகானது சுமார் நான்கு மாதங்களின் பின்னர் சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய 6 நாட்களும் இச்சேவை இடம்பெறும் என்பதுடன், இருவழிப் பயணக் கட்டணமாக இலங்கை மதிப்பில் 28,500 ரூபா அறவிடப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )