விமான நிலையத்தில் சுமார் 08 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

விமான நிலையத்தில் சுமார் 08 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 08 லட்சம் பெறுமதியான மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் இன்று அதிகாலை நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சோதனையின் போது அவரது பயணப்பொதிக்குள் 69 மதுபான போத்தல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டள்ளது.

மினுவங்கொடையைச் சேர்ந்த 28 வயதுடைய தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை மறுதினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )