நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (19) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது.

அதன்படி, காலை 09.30 முதல் மாலை 06.00 வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

காலை 09.30 முதல்10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 முதல் மாலை 06.30 வரை 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நேற்று (18) முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This