தென்னாபிரிக்காவை போராடி வென்றது பாகிஸ்தான் அணி

தென்னாபிரிக்காவை போராடி வென்றது பாகிஸ்தான் அணி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி 2 விக்கெட்டுகளால் பரபரப்பு வெற்றியை பெற்றது.

பைசலாபாத்தில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற போட்டியில் 264 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 4 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் அந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்தபோதும் 2 பந்துகளை மிச்சம் வைத்து இலக்கை எட்டியது.

முன்னதாக மத்திய வரசையில் மொஹமது ரிஸ்வான் (55) மற்றும் சல்மான் அகா (62) 4ஆவது விக்கெட்டுக்கு 91 ஓட்டங்களை பகிர்ந்து வெற்றிக்கு உதவினர்.

முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணிக்கு லுவன் ட்ரே பிரிடோரியஸ் (57) மற்றும் குவன்டன் டி கொக் (63) சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்தனர். மத்திய வரிசை சற்று தடுமாற்றம் கண்டபோதும் தென்னாபிரிக்க அணியால் 49.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 263 ஓட்டங்களை பெறமுடிந்தது.

இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 1–0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (06) பைசலாபாத்தில் நடைபெறவுள்ளது.

Share This