இலட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது – சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர்

இலட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது – சிந்து நதிநீர் ஒப்பந்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவின் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோத முடிவு மிகவும் வருந்தத்தக்கது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. பயங்கரவாதத்தை ஆதரிப்பதை பாகிஸ்தான் நிறுத்தாதவரை அந்த நாட்டுக்கு தண்ணீர் வழங்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், தற்போது இந்த விவகாரத்தை சர்வதேச மட்டத்தில் எடுத்துச்சென்றுள்ளது. தஜிகிஸ்தான் தலைநகர துஷான்பேயில் நடந்து வரும் சர்வதேச பனிப்பாறை பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இது குறித்து பேசியுள்ளார்.

‘சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும் இந்தியாவின் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோத முடிவு மிகவும் வருந்தத்தக்கது. குறுகிய அரசியல் ஆதாயத்துக்காக இலட்சக்கணக்கான உயிர்களை பணயம் வைக்கக்கூடாது. பாகிஸ்தான் இதை அனுமதிக்காது. சிவப்புக்கோட்டை தாண்ட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்’ எனக்கூறியுள்ளார்.

Share This