லாகூர் வான்பரப்பை மூடியது பாகிஸ்தான்

லாகூர் வான்பரப்பை மூடியது பாகிஸ்தான்

வணிக விமானங்கள் பறப்பதை தடை செய்யும் வகையில் தங்களது வான்பரப்பை மூட பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் கூறுகையில், “ லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் வகையில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளது. இருப்பினும் கராச்சி விமான நிலையம் மட்டும் செயல்பாட்டில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்கியதைத் தொடர்ந்து அனைத்து விமானப் போக்குவரத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கும் வகையில் தங்களது வான்வெளியை 48 மணி நேரம் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.

மேலும், இந்தியாவின் பொறுப்பற்ற மற்றும் ஆத்திர மூட்டும் செயல்களால் சிவில் விமானப் போக்குவரத்துக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது குறித்து சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பிடம் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் ஏற்கனவே முறைப்பாடுதெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This