இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் இராணுவத்திற்கு அனுமதி

இந்தியாவைத் தாக்க பாகிஸ்தான் இராணுவத்திற்கு அனுமதி

இந்தியா மேற்கொண்ட தாக்குதலுககு பின்னர் அதற்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆயுதப்படைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“இந்த நியாயமற்ற தாக்குதல்கள் கற்பனையான பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக பொய்யான சாக்குப்போக்கின் கீழ் வேண்டுமென்றே பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்துள்ளன.

இதன் விளைவாக அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர், மேலும் மசூதிகள் உட்பட பொதுமக்களின் உள்கட்டமைப்புக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக,” என்று அந்த அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஐ.நா. சாசனத்தின் பிரிவு 51 இன் படி, அப்பாவி பாகிஸ்தானிய உயிர்களை பலி வாங்கியமைக்கும் அதன் இறையாண்மையை அப்பட்டமாக மீறியதற்கும் பழிவாங்க, தற்காப்புக்காக, அது தேர்ந்தெடுக்கும் நேரத்தில், இடத்தில் மற்றும் முறையில் பதிலளிக்கும் உரிமையை பாகிஸ்தான் கொண்டுள்ளது.”

“இது தொடர்பாக பாகிஸ்தான் ஆயுதப்படைகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க முறையாக அதிகாரம் பெற்றுள்ளன,” என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு, இந்தியா “பிராந்தியத்தில் ஒரு தீயை மூட்டியுள்ளதாக” கூறியதுடன், இந்தியா இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Share This