பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு, ISIS காஷ்மீர் அமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் நடந்த கொடிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஓரிரு நாட்களுக்கு பின்னர் இந்த கொலை மிரடை்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து, கம்பீர் டெல்லியின் ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் ஒரு முறையான முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி கம்பீருக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்தன – ஒன்று மதியம் மற்றும் ஒன்று மாலை – அதில் ‘IKillU’ என்று எழுதப்பட்டிருந்தது, என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கம்பீர் தனது சமூக பக்கமான எக்ஸ் தளத்தில், “இறந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், இதற்குக் காரணமானவர்களை இந்தியா தாக்கும்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்திய மண்ணில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றான பஹல்காம் தாக்குதலில் குறைந்தது 26 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
தாக்குதலுக்குப் பிறகு சந்தேகிக்கப்படும் பயங்கரவாதியின் வரைபடத்தை பாதுகாப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதுடன், இந்திய அரசாங்கமும் கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்கதக்து.