300 ஐ தாண்டிய தேர்தல் சட்ட மீறல்கள்

300 ஐ தாண்டிய தேர்தல் சட்ட மீறல்கள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 68 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, சட்ட மீறல்கள் தொடர்பாக 54 முறைப்பாடுகளும், ஏனைய 14 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 20 ஆம் திகதி முதல் நேற்று வரை பதிவான மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 302 ஆகும்.

வன்முறைச் செயல்கள் தொடர்பான 02 முறைப்பாடுகள், சட்ட மீறல்கள் தொடர்பான 274 முறைப்பாடுகள் மற்றும் 26 ஏனைய முறைப்பாடுகள் இதில் உள்ளடங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Share This