உடனடி அமலுக்கு வரும் வகையில், பல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம்

உடனடியாக அமலுக்கு வரும் வகையில், பல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றங்களும் நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 04 பொலிஸ் பரிசோதகர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.சி. ஹெட்டியாரச்சி , சீன துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து யக்கலமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.வி.ஏ.டி.பி. பெரேரா,யக்கலமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து சீன துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் என்.எஸ்.பி. அபேவர்தன, நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து திம்புலபதன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம். ஆனந்தசிறி , திம்புலபதன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் ஆர். நிரோஷன் , சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து நல்லதன்னிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.ஏ.பி.எஸ். வீரசேகர, நல்லதன்னிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து சிதம்பரபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜி.ஜே. குணதிலக,மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து கஹடகஸ்திகிலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.எஸ். அபேசேகர, கஹடகஸ்திகிலிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் ஜி.கே. ராஜகருணா,மஹவ பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் பரிசோதகர் பதவியில் இருந்து சாதாரண கடமைகளுக்காக அனுராதபுரம் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.ஏ.பி.ஏ. பொல்பிதிகம குலதுங்க ,பொல்பிதிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து மஹவ பொலிஸ் தலைமையக பொலிஸ் பரிசோதகராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.எம்.எஸ். பண்டார, நிக்கவெரட்டிய பிரிவில் இருந்து பொல்பிதிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமை புரிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.ஆர். லக்ஷ்மன் , அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் யூ.கே.ஜி.கே.எச். சுபசிங்ஹ, ரிதீகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்..
பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.டி.எஸ்.சி. புஷ்ப குமார, கண்டி பிரிவில் இருந்து ரிதீகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.எம். சிந்தக குமார , களனி பிரிவில் இருந்து மீகஹவத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் கடமை புரிய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.ஜி. நிலந்த , வைத்திய சேவை பிரிவில் இருந்து கல்கிஸ்ஸ பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.