
சாதாரண தரப் பரீட்சை: மேலதிக வகுப்புக்களுக்குத் தடை
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்துதல் உள்ளிட்ட அது தொடர்பான அனைத்துச் சேவைகளும் தடைசெய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
TAGS சாதாரண தரப் பரீட்சை
