செர்பிய நாடாளுமன்றத்தின் மீது எதிர்க்கட்சியினர் புகை குண்டு தாக்குதல்

செர்பிய நாடாளுமன்றத்தின் மீது எதிர்க்கட்சியினர் புகை குண்டு தாக்குதல்

செர்பியாவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, ​​அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு ஒன்று நாடாளுமன்ற அறைக்குள் புகை குண்டுத் தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் கர்ப்பிணி நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட செர்பிய ஆளும் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஊழல் எதிர்ப்பு ஆட்சி முறையைக் கோரி செர்பியாவில் நடந்து வரும் தொடர் போராட்டங்களை ஆதரிக்கும் நோக்கில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த வழியில் நாடாளுமன்றத்தைத் தாக்கியுள்ளனர்.

கடந்த நவம்பரில் செர்பிய ரயில் நிலையத்தில் கூரை இடிந்து விழுந்து 15 பேர் கொல்லப்பட்ட துயர சம்பவத்தைத் தொடர்ந்து, செர்பிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share This