எதிர்க்கட்சி தலைவரின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

எதிர்க்கட்சி தலைவரின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

பரவசத்துடன் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி தினம் இன்றாகும். அதற்காக வாழ்த்துச் செய்தி அனுப்புவதை பாக்கியமாக கருதுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் எதிர்க்கட்சி தலைவரின் வாழ்த்துச் செய்தியில்,

“இது சிவபெருமானுக்கு யாகம் செய்யும் இந்து பக்தர்களின் சமயப் பண்டிகையாகும். இதில் இந்து சமய பக்தர்கள் இரவில் விரதமிருந்து சிவபெருமானுக்கு பூஜை செய்வதன் மூலம் மாயை எனும் இருள் நீங்கி அறிவொளி பிறக்கட்டும் என்னும் பிரார்த்தனையை செய்கின்றனர்.

சிவபெருமானின் திருநாளைக் குறிக்கும் நம்பிக்கைகள் முழு உலகிலும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்கி, நேர்மை, தாராள மனப்பான்மை மற்றும் மன்னிப்பு ஆகிய உண்மைப் பண்புகளுடன் வாழ உலகை அழைக்கின்றன.

இந்த நற்பண்புகளின் அடிப்படையில் நாம் ஒரு நாடாகச் செயல்பட்டால், இருள் நீங்கி, ஞான ஒளியுடன், தற்போதுள்ள வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு அமைதி, வளம், நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த முடியும் என்பது எனது நம்பிக்கை.

இது நம் நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  பல மதங்கள், பல இனங்கள் கொண்ட நாடாக, இன, மத, கலாச்சார மற்றும் பன்முகத்தன்மையின் அழகையும் மதிப்பையும் அங்கீகரிப்பதற்கு இந்த நாளில் நாம் மறந்துவிடக்கூடாது.

எனவே, மகா சிவராத்திரி தினத்தை கொண்டாடும் சகோதர இந்துக்கள் மற்றும் முழு உலக வாழ் மக்களும் பிரார்த்திப்பதைப் போல, ஆன்மீக விடுதலையின் மூலம் அமைதியையும் சமாதானத்தையும் பிரார்த்தனை செய்கின்றேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This