
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு
பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக ஒவ்வொரு வான்கதவும் இரண்டு அடி அகலத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பொல்கொல்ல அணையிலிருந்து விக்டோரியா நீர்த்தேக்கம் வரையிலான மகாவலி ஆற்றின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
CATEGORIES இலங்கை
