ஷாருக் கானின் நிகழ்வில் பங்கேற்க அழைப்பாளர்களுக்கு மாத்திரமே அனுமதி

தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த ஹோட்டலான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் இலங்கை (city of dreams sri lanka) எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி பிரமாண்டமாக திறப்பு விழாக்காண உள்ளது.
இதன் திறப்பு விழாவில் போலிவூட் பிரபலம் ஷாருக் கான் பங்கேற்க உள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் குறித்த நிகழ்வில் அழைப்பாளர்கள் மாத்திரமே பங்கேற்க முடியும் என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொது மக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படாதென தெரியவருகிறது.