கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
கிரிந்திவெல வல்கம்முல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று (21) மாலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் 42 வயதான திம்பிரிகம, கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் குத்தகை அடிப்படையில் கையகப்படுத்திய காணியின் காவலாளியே இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் கொலையை செய்துவிட்டு உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றுள்ளதாகவும் கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.